பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
*2026 ஆம் ஆண்டில் 5 – 13 வரையான தரங்களுக்கான பாடசாலை நேரம் மு.ப 7.30 முதல் பி.ப 1.30 வரை மாற்றமின்றி தொடரும்.
*அரச, அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் 2026 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்காக ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
*தரம் 6 முதல் தரம் 13 வரை ஒரு நாளுக்கான பாடவேளைகளின் எண்ணிக்கை 7 ஆகும்.
*ஒரு பாடவேளைக்காக 45 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
*2026 ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடு தரம் 1 மற்றும் தரம் 6 இற்கு நடைமுறைப்படுத்தப்படும்.
*கல்வி மறுசீரமைப்புச் செயற்பாட்டின் கீழ், தரம் 6 இற்கான கல்வி நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக 2026 ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
*தரம் 1 இற்கான மாணவர்களை அறிமுகப்படுத்தும் செயற்பாடு 2026 ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாவதுடன், உத்தியோகபூர்வமாக கல்வி நடவடிக்கைகள் 2026 ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமாகும்.
*தரம் 1 இற்குரிய செயற்பாட்டு புத்தகங்கள் மற்றும் தரம் 6 இற்குரிய கற்றல் தொகுதிகள் (Learning Modules), அந்தத் தரங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
*ஏனைய தரங்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள் இதுவரையில் விநியோகித்து முடிக்கப்பட்டுள்ளன.
*2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி 2026 ஜனவரி 12 முதல் 20 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.
*இது தொடர்பான விரிவான சுற்றுநிருபம் 2026 ஜனவரி 2 ஆம் திகதி வெளியிடப்படும்.
நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் போக்குவரத்துச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரம் நீடிக்கப்படாது என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக, கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள கல்வி அமைச்சின் விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தரம் 5 – 13 வரையான மாணவர்களுக்கு காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை வழமையான நேர அட்டவனை தொடரும்.
தரம் 6 முதல் 13 வரை நாளொன்றுக்கு 7 பாடவேளைகள் இடம்பெறும் என்பதுடன், ஒரு பாடவேளைக்கு 45 நிமிடங்கள் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 2026 இல் தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குக் கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், தரம் 6ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தரம் ஒன்றுக்கான மாணவர்களை உள்வாங்கல் செயற்பாடுகள் ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாவதுடன், உத்தியோகபூர்வ கற்பித்தல் நடவடிக்கைகள் ஜனவரி 29ஆம் திகதி ஆரம்பமாகும்.
அத்தோடு தரம் 1 மற்றும் 6 மாணவர்களுக்கான புதிய பாடத் புத்தகங்கள் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் வழங்கப்படும் என்றும், ஏனைய தரங்களுக்கான புத்தகங்கள் ஏற்கனவே வழங்கி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










