93 நண்பர்கள் அமைப்பினால் திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

93 நண்பர்கள் அமைப்பினரால் திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 04-01-2026 அன்று வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பின் பிரபல ஆண்கள் பாடசாலைகளான மெதடிஸ்த மத்திய கல்லூரி, புனித மிக்கேல் கல்லூரி மற்றும் சிவானந்தா பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவர்களைக் கொண்ட Friends of 93 என அழைக்கப்படும் 93 நண்பர்கள் அமைப்பினால் மட்டக்களப்பு கல்குடா வலயத்திற்குட்பட்ட திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பைகள், அப்பியாசப் புத்தகங்கள் உட்பட பல்வேறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை அதிபர் எஸ்.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 93 நண்பர்கள் அமைப்பின் சார்பில் சக்தீஸ்வரன், துதிகரன், கிருபாகரன், ருஷாந்தன் மற்றும் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு 85 மாணவர்களுக்கான புத்தகப்பைகள், அப்பியாசப் புத்தகங்கள், 17 மாணவர்களுக்கான கணித உபகரணப் பெட்டிகள் வழங்கி வைத்தனர்.

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாணவர்களுக்கான கல்வி தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects