மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் தமிழ் மொழித்தின விழா 11.04.2024 அன்று கல்லூரியின் அதிபர் நிமலினி பேரின்பராஜா தலைமையில் கல்லூரி ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
கல்லூரி மாணவிகளின் கலாசார வாத்திய இசையுடன் அதிதிகள் பாடசாலையின் பிரதான மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றியதைத் தொடர்ந்து இறை ஆராதனையுடன் தமிழ்த் தாய்வாழ்த்து இசைக்கப்பட்டு வரவேற்பு நடனத்துடன் விழா ஆரம்பமானது.
பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற தமிழ் மொழித்தினப்போட்டியில் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு குழுநடனம், விவாதம், வில்லிசைப்பாடல் மற்றும் நாடகம் என்பன அரங்கேற்றப்பட்டது.
இந் நிகழ்வின் போது ஆன்மிக அதிதியாக அனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்கினேஸ்வரர் ஆலய பிரதம குரு கலந்து கொண்டதோடு அதிதிகளாக மட்டக்கப்பு வலய கல்வி அலுவலக பிரதிக் கல்விப்பணிப் பணிப்பாளர்களான திருமதி ரீ.உதயகரன், கே.கரிகரராஜ், ஓய்வு நிலை மாகாணக்கல்வி பணிப்பாளர் எம்.பவளகாந்தன் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇