டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட தொழில்துறையினருக்கான இரண்டாம் கட்ட பதிவு ஆரம்பம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதி மற்றும் உற்பத்தித் துறைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களைப் பதிவு செய்யும் இரண்டாம் கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. 

உற்பத்தி மற்றும் சிறு அளவிலான தொழில்துறையினரின் கோரிக்கைக்கு இணங்க இந்த மறுபதிவு செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. 

குறித்த பதிவு நடவடிக்கைகள் ஜனவரி 16 ஆம் திகதி வரை தொடரும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

அமைச்சில் இதுவரை பதிவு செய்யப்படாத சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகளுக்கு 200,000 ரூபா பேரிடர் நிவாரணக் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது. 

இந்த நிதி விநியோக நடவடிக்கைகள் அந்தந்த மாவட்டங்களின் பிரதேச செயலகங்கள் ஊடாக ஒருங்கிணைக்கப்படும். 

அமைச்சின் தரவுகளின் அடிப்படையில், 29,649 ஏற்றுமதி, உற்பத்தி மற்றும் சிறுஃநடுத்தர வணிகங்கள் (அறிமுகப்படுத்தப்பட்ட அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக பதிவு செய்யப்பட்டுள்ளன). 

9,628 ஏற்றுமதி மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள் (நேரடியாக அமைச்சின் கண்காணிப்பின் கீழ் உள்ளவை) என்பன பதிவு செய்யப்பட்டுள்ளன. 

பாதிக்கப்பட்ட வணிகங்களுக்குத் தேவையான மேலதிக ஆதரவை வழங்கவும், இந்தச் செயல்முறைகளை எளிதாக்கவும் அமைச்சினால் 1,500 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects