சாரதி உரிமங்களை ஒன்லைனில் வழங்க நடவடிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 25 மாவட்டங்களிலும் சாரதி உரிமங்களை ஒன்லைனில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த சேவை 11 மாவட்டங்களில் ஒன்லைனில் செயல்பட்டு வருகிறது.

மீதமுள்ள மாவட்டங்களில் சாரதி உரிமங்களை ஒன்லைனில் வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் சாரதி உரிமங்களை ஒன்லைனில் வழங்குவதன் மூலம், ஒரு மாதத்திற்குள் சாரதி உரிமங்களைப் பெற முடியும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு, சாரதி உரிமங்களை அச்சிடுவதற்காக ஒரு தனியார் நிறுவனத்திற்கு 184 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டது.

இந்தாண்டு 28 மில்லியன் ரூபாய் செலவில் புதிய நிறுவனம் மூலம் சேவையைப் பெறவும், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூலம் அச்சிடும் இயந்திரங்களை வாங்கவும், தனது சொந்த திணைக்களம் மூலம் சாரதி உரிமங்களை அச்சிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects