டிசம்பர் மாத பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (21.01.2026) வெளியிட்டுள்ள தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. 

கடந்த நவம்பர் மாதம் 2.4% ஆகக் காணப்பட்ட முதன்மை பணவீக்கம், டிசம்பர் மாதத்தில் 2.9% ஆக அதிகரித்துள்ளது. 

அதேநேரம் நவம்பர் மாதம் 3.6% ஆக இருந்த உணவு பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 4.4% ஆக உயர்ந்துள்ளது. 

அத்துடன் கடந்த நவம்பர் மாதத்தில் 1.5% ஆகக் காணப்பட்ட உணவு அல்லாப் பணவீக்கம், டிசம்பர் மாதத்தில் 1.6% ஆக அதிகரிப்பை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects