நாளை புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள அனர்த்தத்தால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான தேசிய வேலைத்திட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை, சமய வழிபாடுகளுக்கு ஏற்ற வகையில் விரைவாக புனர்நிர்மாணம் செய்வதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நாளை (27.01.2026) முற்பகல் 10.00 மணிக்கு கம்பளை, தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையிலும், பிற்பகல் 3.00 மணிக்கு மாத்தளை, கவடயாமுன புராண ரஜமஹா விஹாரையிலும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் தலங்கள் சேதமடைந்தன.

அந்த இடங்களில் தேவையான புனரமைப்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கி அவற்றை முன்னர் இருந்த நிலைக்கு மீளக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து புனரமைப்புப் பணிகளையும், குறித்த இடங்களின் தொல்லியல் பெறுமதியைப் பாதுகாக்கும் வகையில் மகா சங்கத்தினர் உட்பட ஏனைய மதத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects