சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்த உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனையும் கண்காட்சியும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எச.முஸம்மில் தலைமையில் 27.11.2023 திகதி சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
இக்கண்காட்சியில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர்கள், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், நிருவாக உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இக் கண்காட்சியில் உள்ளூர் உணவு வகைகள், மரக்கன்றுகள், பாதணிகள், கைப்பணிப்பொருட்கள், மற்றும் தைத்த ஆடைகள் மரத்தினாலான கைவினை பொருள்கள் என பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட தோடு கண்காட்சியில் கலந்து கொண்டவர்கள் பொருட்களயும் கொள்வனவு செய்திருந்தனர் .
இக் கண்காட்சி ஊடக உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட விற்பனையாளர்களும் நன்மைகளை பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇