1756ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சில தொல்பொருட்கள் உத்தியோகபூர்வமாக மீண்டும் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், குறித்த தொல்பொருட்கள், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளன.
கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தின் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் குறித்த தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்தின் இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது 6 தொல்பொருட்களை இலங்கைக்கு மீண்டும் ஒப்படைப்பதற்கான உரிமை பரிமாற்றல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
ஒல்லாந்தர் ஆட்சி காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டிருந்த 6 தொல்பொருட்கள், இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்தநிலையில் 29.11.2023 அன்று அதிகாலை குறித்த தொல்பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்குரிய மேலும் பல தொல்பொருட்களை நாட்டுக்கு மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பில் இருதரப்பு அரசாங்கங்கள், அருங்காட்சியகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்களுக்கு இடையில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇