78 ஆவது தேசிய சுதந்திர தின விழா இன்று (04.02.2026) காலை சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறுகின்றது.
இம்முறை தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் “இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெறுகின்றது.
சுதந்திர தின நிகழ்வில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 287 அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
அத்துடன், 4,298 இராணுவ சிப்பாய்கள் சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்பதுடன் சுதந்திர தின பிரதான அணிவகுப்பிற்காக கடற்படையின் 8 பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் கலந்துகொள்வதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.
சுதந்திர தின நிகழ்விற்காக விமானப்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 62 அதிகாரிகள் மற்றும் 521 படைவீரர்கள் உட்பட 583 பேர் கலந்துகொள்வதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கீகனகே தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










