ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் “பரிதி” தோல் நோய் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் “பரிதி” தோல் நோய் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு பிராந்திய தொழு நோய் தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் லுபொஜிதா கமல்ராஜ் தலைமையில் 04.02.2026 அன்று நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கை சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் நாயகம் வைத்தியர் எஸ்.மகேந்திர அர்னால்ட் கலந்துகொண்டு தோல் நோய் சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்தார்.

மேலும் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் R.முரளீஸ்வரன், மாவட்டத்தின் மூத்த தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் N.தமிழ் வண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் தொற்றா நோய்கள் தடுப்பு பிரிவுக்கான பொறுப்பதிகாரி வைத்தியர் மயில்வாகனம் ருதீசன், மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் S. ரவிச்சந்திரன், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தேவசிங்கம் திலக்சன், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் K.ரமேஷ், வாகரை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சோதிராஜ், பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சரவணன், தொழு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் பொதுச் சுகாதார பரிசோதகர் தீபகுமரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மாவட்டத்தின் மூத்த தோல் நோய் வைத்திய நிபுணர் ஆகியோரால் பிரதம அதிதி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

குறித்த சிகிச்சை மையத்தில் தொழு நோயாளர்களுக்கான கிளினிக் ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் முன்னெடுக்கப்படுவதுடன் இதுவரை காலமும் மட்டக்களப்பு பொது வைத்திய சாலையில் தொழு நோயாளர்களுக்கான சிகிச்சைகள் நடைபெற்று வந்த நிலையில் நோயாளர்களின் போக்குவரத்துச் சிரமங்களை கருத்திற் கொண்டு 02 ஆவது நிலையமாக இது திறந்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சுகாதார பரிசோதகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(புகைப்பட உதவி – M.சிவகுமார்)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects