மட்டக்களப்பு மாவட்ட போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டமானது பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் 10.02.2026 அன்று நடைபெற்றது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், இளையதம்பி சிறிநாத், பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், பிரதேச சபைத் தவிசாளர் வி.மதிமேனன் மற்றும் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கல்வி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு, சுகாதாரம், விவசாயம், கால்நடை, நீர்பாசனம், போக்குவரத்து, யானை மனித மோதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
மேலும் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள், இவ் வருடம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










