மாத்தளை மாவட்டத்தில் குரங்குகளுக்கான சரணாலயம் – வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி தெரிவிப்பு

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மாத்தளை மாவட்டத்தில் குரங்குகளுக்கான சரணாலயம் ஒன்று நிர்மாணிக்கப்பட உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி சமத் லக்ஷ்மன் பெரேரா மாத்தளையில் வைத்துத் தெரிவித்தார்.

மாத்தளை கலுகங்கை நீர்த்தேக்கத்திற்கு அருகில் இதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்டுள்ள இவ்விடம் 150 ஏக்கர் பரப்பைக் கொண்டது. இத்திட்டம் வனவிலங்கு பாதுகாப்புத் துறையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஒப்புதலையும் பெற்றுள்ளதாகத் தெரவித்தார்.

குரங்குகள் மீண்டும் காட்டுக்குள் தப்பிச் செல்வதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த சராலயத்தில் அரண்கள் அமைக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் போதுமான இயற்கை உணவு இருப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் தேவைப்பட்டால் கூடுதல் ஏற்பாடுகள் வழங்கப்படும்.

இந்த திட்டம் மாத்தளை நகரில் ஆய்காய்கே காணப்படும் குரங்குகளைப் பிடித்து அவற்றின் தொல்லைகளைக் குறைப்பதே நோக்கமாகும்.

பெண் குரங்குகளுக்கு கர்ப்பத்தடை நடவடிக்கை ஒன்றும் மேற்கொள்ளப்பட உள்ளது. தடுக்க இதற்காக கருப்பையில் சிறிய அளவிலான வளையம் ஒன்று பொருத்தப்பட உள்ளது. இது குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உதவும்.

மாகாணங்களுக்கு இடையில் குரங்குகளை நகர்த்துவது சவாலானது என்பதால், நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் ஒன்பது குரங்கு தடுப்பு மையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

மாத்தளையின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் வசிக்கும் குரங்குகள் அவற்றின் இயற்கையான வாழ்விடத்திலேயே இருக்கும், அதே நேரத்தில் நகரப் பகுதிகளில் இடையூறுகளை ஏற்படுத்துபவை புதிய மையத்திற்கு மாற்றப்படும்.

இந்த திட்டம் ஒரு முன்னோடி முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ளது. மலேசியா உட்பட பல நாடுகளில் இதேபோன்ற குரங்கு தடுப்பு சரணாலயங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects