திருகோணமலை அஷ்ரொப் துறைமுகத்தை வந்தடைந்த “M.V.Crystal Symphony” எனும் கப்பல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 555 சுற்றுலாப் பயணிகளுடன் “M.V.Crystal Symphony” எனும் கப்பல் இன்று (23.02.2026) இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான திருகோணமலை அஷ்ரொப் துறைமுகத்தை வந்தடைந்தது.

அவுஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இக்கப்பல் மூலம் திருகோணமலைக்கு தரையிறங்கியதுடன், அவர்கள் திருகோணமலை, சீகிரியா, ஹபரணை போன்ற பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

பஹாமாஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இக்கப்பலில் 497 பணியாளர்கள் வருகை தந்துள்ளதுடன் இவர்கள் திருகோணமலையில் ஒரு நாள் சுற்றுப்பயணத்தில் ஈடுபடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா மையமான திருகோணமலைக்கு இச்சுற்றுலாப் பயணிகளின் வருகை, கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறைக்கு பெரும் பக்கபலமாக இருக்கும் என சுற்றுலாத் துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects