லிட்ரோ எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மார்ச் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் (Litro Gas) தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட விலையின் அடிப்படையில் சந்தையில் எரிவாயு சிலிண்டர்கள் சந்தையில் பின்வரும் விலைகளின் அடிப்படையில் விற்றபனை செய்யப்படுகிறது.

12.5 கிலோ கிராம் சிலிண்டர்: ரூபா 3,690

5 கிலோ கிராம் சிலிண்டர்: ரூபா 1,482

2.3 கிலோ கிராம் சிலிண்டர்: ரூபா 694

இதேவேளை, மார்ச் மாதத்திற்காக 38,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை லிட்ரோ நிறுவனம் ஓடர் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 7,800 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே நாட்டிற்கு வந்தடைந்துள்ளது.

எஞ்சிய 30,200 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் தற்போது மாலைதீவு கடற்பரப்பில் தயார் நிலையில் உள்ளது. அங்கிருந்து தேவையான கையிருப்பு உடனுக்குடன் நாட்டிற்கு கொண்டுவரப்படும்.

இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என நிறுவனம் உறுதிப்படத் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects