உள்நாட்டு சந்தைக்கு இன்று (09.03.2026) 3,700 மெட்ரிக் தொன் எல்பி (LP) எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா (Litro Gas Lanka) நிறுவனம் அறிவித்துள்ளது.
அண்மைக் காலங்களில் மொத்தம் 7,900 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
மார்ச் மாதத்திற்காக 38,000 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்கள் கோரப்பட்டுள்ளது.
கூடுதலாக 30,000 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்கள் தற்போது மாலைதீவில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
கோரப்பட்டுள்ள மற்றுமொரு கப்பல், 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்களுடன் மார்ச் 17 ஆம் திகதி மாலைதீவை வந்தடைய உள்ளது என்றார்.
இதேவேளை, அண்மையில் இலங்கையை வந்தடைந்த கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட 3,700 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கும் பணிகளைத் தமது நிறுவனம் தற்போது முன்னெடுத்து வருவதாக லாஃப்ஸ் கேஸ் (Laugfs Gas) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நலிந்த குருகுலசூரிய தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










