உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசுத்தொகை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026 ஐசிசி டி-20 உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக வென்ற முதல் அணி என்ற சரித்திர சாதனையை இந்தியா படைத்துள்ளது.

அஹமதாபாத் நரேந்த்ரமோடி விளையாட்டரங்கில் 08.03.2026 அன்று நடைபெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 96 ஓட்டங்கள் என்ற வித்தியாசத்தில் இந்திய வெற்றி பெற்றது.

இந்தநிலையில், வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் சபை பரிசுத்தொகை ஒன்றை அறிவித்துள்ளது.

அதன் அடிப்பையில், இந்திய அணிக்கு 131 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ (Board of Control for Cricket in India) இன்று (10.03.2026) அறிவித்துள்ளது.

போட்டியாளர்கள், பயற்றுவிப்பாளர்கள் என அனைவருக்கும் இந்த பரிசுத்தொகை பகிர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டி20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு ஐசிசி ரூ. 27 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects