மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட சமுதாய அமைப்பு மிளாய்வுக் கலந்துரையாடல் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 30.11.2023 அன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் கடைமையாற்றும் முகாமைத்துவ பணிப்பாப்பாளர்கள், சமுதாய அடிப்படை அமைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
சமுர்த்தி தலைமை முகாமையாளர் மனோகிதராஜ் ஒழுங்கமைப்பில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் , காணப்படுகின்ற சமுர்த்தி கட்டுப்பாட்டு சபையினூடாக சமுர்த்தி கிளையில் இருக்க அங்கத்தவர்களுக்கு வழங்கப்படும் கடன்கள், கட்டுப்பாட்டு சபையினால் தரப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் தெடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு இவ் ஆண்டிகற்கான சந்தாப்பண விபரங்கள் மற்றும் வறுமை ஒழிப்பு வாரத்திற்கான தேசிய சிரமதான வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், கட்டுப்பாட்டு சபையின் மூலம் நிதியினை செலவிடும் முறைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…