இலங்கை தேசிய ரக்பி அணியின் மேம்பாட்டிற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தியரி ஜேனெசெக் (Thierry Janeczek) புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஏழு பேர் கொண்ட ரக்பி அணியின் பயிற்சியாளரான தியரி ஜேனெசெக், அடுத்த ஆறு மாத காலத்திற்கு இலங்கை ரக்பி அணியின் பயிற்சியாளராக கடமையாற்றவுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவைக் கருத்திற்கொண்டே இலங்கை ரக்பி சங்கம் இத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
புதிய பயிற்சியாளரின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படவுள்ள பயிற்சிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளன.
சர்வதேச ரீதியில் அனுபவம் வாய்ந்த ஒரு பயிற்சியாளரின் வருகையினால், இலங்கை ரக்பி அணி ஆசிய மட்டத்தில் சிறந்த வெற்றிகளைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










