தற்காலிக சோர்வு பாதிப்பு…..
திடீரென்று உங்கள் உடலில் ஏதேனும் உறுப்புகள் சோர்வடைந்தாலோ அல்லது மதமதப்பு… பலவீனம் அடைந்தாலும் அவை மூளையில் இயங்கி வரும் குருதி ஓட்டத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதன் அறிகுறி என்றும்.. இதனை கவனியாது விட்டால் பக்கவாத பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும் வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
நாளாந்த பணியை மேற்கொண்டிருக்கும் போது திடீரென்று சோர்வு ஏற்பட்டாலோ… தலைவலி ஏற்பட்டாலோ.. உங்களுடைய மூளையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குருதி ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதன் அறிகுறியாகும். இது நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்களுக்கு பக்கவாதத்தின் அறிகுறியாகவும் வெளிப்படும். மூளை பகுதியில் ரத்த ஓட்டம் குறைந்தாலோ அல்லது குருதி ஓட்டத்தில் பாதிப்பு – தடை ஏற்பட்டாலோ பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்திய கூறு அதிகமாகிறது. இது தலைவலி, வாந்தி, குமட்டல் ஆகிய அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
இதனை தொடக்க நிலையிலேயே துல்லியமாக அவதானித்து சிகிச்சை பெற்றால்.. பூரணமாக நிவாரணம் பெற இயலும். ஆனால் பாதிப்பு அதிகமான பிறகு கண்டறிந்து சிகிச்சை பெற தொடங்கினால் ஆயுள் முழுவதும் கட்டுப்படுத்தும் நிவாரண சிகிச்சையை வழங்கலாம். அதனால் உங்கள் உடல் சோர்வு தற்காலிகமானதாக இருந்தாலும் திடீரென்று ஏற்பட்டால்.. அதற்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் வலியுறுத்துகிறார்கள்.
வைத்தியர் உமேஷ்


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










