மதகு வழங்கும் ஆரோக்கிய தகவல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டெர்மட்டிலோமேனியா எனும் பாதிப்பிற்கான நவீன நிவாரண சிகிச்சை…….

எம்மில் சிலர் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவர்களுடைய ஏதேனும் ஒரு தோல் பகுதியில் கிள்ளிக் கொள்வதை அல்லது லேசாக சொரிவதை பார்த்திருப்போம். சில தருணங்களில் அதனை தர்மசங்கடமாகவும் உணர்ந்திருப்போம்.

இத்தகைய அறிகுறி அவர்கள் மருத்துவ மொழியில் டெர்மட்டிலோமேனியா எனக் குறிப்பிடப்படும் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கக்கூடும். இத்தகைய உளவியல் சார்ந்த பாதிப்பிற்கு தற்போது கலந்தாலோசனை உடன் கூடிய நவீன நிவாரண சிகிச்சை வழங்கப்படுகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய வளர் இளம் பருவத்தை சார்ந்தவர்களில் சிலர் தங்களது முகத்தில் ஏற்பட்டிருக்கும் பருக்களை கைகளால் தொடர்ந்து கிள்ளுவதை பார்த்திருப்போம். இதில் சிலருக்கு தாங்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறோம் என்பதே தெரியாமல் செய்து கொண்டிருப்பர். சிலருக்கு இத்தகைய பழக்கம் சில நிமிடங்கள் முதல் சில மணி தியாலங்கள் வரை நீடிக்கும். சிலருக்கு நாளடைவில் இது அவர்களின் பழக்க வழக்கமாக மாறிவிடக்கூடும்.

விரும்பத்தகாத உணர்ச்சிகள், உள்ளுணர்வு, மன அழுத்தம், மன பதட்டத்தை சமாளிப்பதற்கான முயற்சி , முடிவெடுக்கும் திறனில் சமசீரற்ற நிலை, தவறான முடிவுகளுக்கு எதிர்மறையான விமர்சனம் செய்து கொள்ளல் ..இப்படி பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு இளம் வயதிலேயே பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுகிறது. இதில் தோலை தொடர்ந்து கிள்ளும் போக்கிற்கு மருத்துவ மொழியில் டெர்மட்டிலோமேனியா என குறிப்பிடப்படுகிறது.

இதனால் உடல் ரீதியாக ஏற்படும் வடு, தழும்புகள் , கிருமி தொற்று, போன்ற பாதிப்புகளுக்கு பிரத்யேக முறையில் மருந்தியல் சிகிச்சை வழங்கி நிவாரணம் அளிக்கப்படுகிறது. பிறகு உளவியல் ரீதியாக கலந்தாலோசனை- கடைப்பிடிக்கப் படவேண்டிய வாழ்க்கை நடைமுறை குறித்தும், உளவியல் மேலாண்மை குறித்தும் விவரித்த பிறகு விவரித்தல் தொடர்பான நடத்தை சிகிச்சை வழங்கி நிவாரணம் தருவார்கள். முதலில் இத்தகைய அறிகுறிகள் தோன்றினால்… இவை மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட சம சீரற்ற மனநிலை என்பதை உணர்ந்து இதற்குரிய சிகிச்சையையும் , ஆலோசனையையும் அவசியம் பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

வைத்தியர் விகாஸ்

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects