அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான முக்கோணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை இளையோர் மகளிர் அணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணமாகவுள்ளது.
இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 19 வயதிற்குட்பட்ட இளையோர் மகளிர் அணிகளுக்கு இடையே இந்த முக்கோண மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.
இலங்கை இளையோர் மகளிர் அணி எதிர்வரும் ஏப்ரல் 03 ஆம் திகதி அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்படவுள்ளது.
இத்தொடருக்கான போட்டிகள் ஏப்ரல் 07 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










