“உதிரம் கொடை உயிர் கொடை” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு நூற்றாண்டு நட்சத்திர லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் ஆலய இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் ரெவன் ராகல் ஒருங்கிணைப்பில் பங்கு தந்தை அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளாரின் தலைமையில் இரத்ததான நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
நிகழ்வில் மட்டக்களப்பு நூற்றாண்டு நட்சத்திர லயன்ஸ் கழக தலைவர் லயன் குகநாதன், கிழக்கு மாகாணக லயன்ஸ் கழக ஆளுனரின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் லயன் செல்வேந்திரன், நூற்றாண்டு நட்சத்திர லயன்ஸ் கழகத்தின் வலய தலைவர் லயன் குணராஜா, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் கிருஷ்ணமூர்த்தி டிலுஷா, பொதுசுகாதார பரிசோதகர் எம்.எம்.பைசல் உட்பட வைத்திய ஆளணியினர், இளைஞர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇