இராணுவ மகளிர் படை சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமிதா பண்டார தென்னகோன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பெண் இராணுவ அதிகாரிகளை இராணுவத்தின் உயர் பதவிக்கு நியமிக்கும் வகையில் இந்தசட்டங்கள் புதுப்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தென்னக்கோன் தெரிவித்தார்.
இன்று நாம் இங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பற்றி பேசுகிறோம். பெண்கள் உயர் பதவிகளுக்கு வர வழிகள் உள்ளன. ஆனால் சில இடங்களில் பிரச்சனைகள் உள்ளன.
ஆயுதப்படை என்பது அத்தகைய இடம் ஆயுதப்படையில் பெண் அதிகாரி உயர் பதவிக்கு செல்லும் வகையில் எதிர்காலத்தில் விதிகளை தயார் செய்வோம். இது தொடர்பான வரைவு தயாரிக்கப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் சபையில் தெரிவித்தார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇