தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஊடாக குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதான தொற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்தார்.

24.04.2026 அன்று முதல் ஆரம்பமாகும் உலக நோய் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு வைத்தியர் பாலித கருணாபேம இக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

“நாங்கள் ஏப்ரல் 24 முதல் 30 வரை உலக நோய் எதிர்ப்பு வாரத்தைக் கொண்டாடுகிறோம். நோய் எதிர்ப்புத் தன்மையில் இலங்கை மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. 1978 ஆம் ஆண்டு முதல் எமது நாட்டில் தேசிய தடுப்பூசி திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக தடுப்பூசிகள் மூலம் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். போலியோ, பிறந்த குழந்தைகளுக்கான Neonatal tetanus மற்றும் ருபெல்லா போன்ற நோய்களை இலங்கையிலிருந்து ஒழிக்க முடிந்தது. தடுப்பூசிகள் காரணமாக ஏனைய நோய்களைத் தடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்காரணமாக, கடந்த 15 ஆண்டுகளில் ஆயுட்காலம் அதிகரிக்கவும், குழந்தை இறப்பு வீதம் குறையவும் தேசிய தடுப்பூசி திட்டம் முக்கியமானதாக அமைந்துள்ளது.”

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects