உலகளாவிய கடவுச்சீட்டு சுட்டெண் வரிசையில் இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்துள்ள இடம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026 ஆம் ஆண்டில், ஹென்லி கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கை 93 வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள 39 நாடுகளுக்கு இலங்கையர்கள் விசா இன்றி அல்லது இலகுவான நடைமுறைகள் மூலம் பயணிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது கடந்த சில ஆண்டுகளை விட முன்னேற்றகரமான ஒன்றாகத் தெரிந்தாலும், உண்மையில்  அது கேள்விக்குரிய ஒள்றே.

ஹென்லி கடவுச்சீட்டு சுட்டெண் என்றால் என்ன?

20 ஆண்டுகளுக்கும் மேலாக உலகளாவிய நடமாட்டப் போக்குகளை  கண்காணித்து வரும் சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின்  பிரத்யேகத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த சுட்டெண் கணிக்கப்படுகின்றது.

இது 199 கடவுச்சீட்டுகளை 227 இடங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்து கடவுச்சீட்டு சுட்டெணை தீர்மானிக்கின்றது.

இருபது ஆண்டுகால வீழ்ச்சி: ஒரு விரிவான பார்வை

இலங்கையின் தற்போதைய நிலை ஒரே இரவில் உருவானதல்ல. கடந்த இரு தசாப்த காலத் தரவுகளைப் பார்க்கும்போது, உலகளாவிய நடமாட்ட உரிமையில் நாடு படிப்படியாகப் பின்வாங்கியதை அவதானிக்க முடிகின்றது.

2006 இல் கடவுச்சீட்டுக்கான தரநிலைப்படுத்தலில் இலங்கை 74 வது இடத்தில் இருந்தது. ஆனால், 2007 இல் 76 வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டு, மீண்டும் 2009 இல் 79 வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.

உள்நாட்டுப் போர் முடிந்த பின்னரும்  இந்நிலையில்  எந்தவொறு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனால் 2010 இல் மீள  84 வது இடத்திற்கும், 2011 இல் 92 வது இடத்திற்கும் சரிந்து. 2012 இல் மீளவும்   96 வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டது.

மேலும்  2014 இல் சற்று முன்னேறி 88 வது இடத்திற்கு வந்தாலும், அது நீடிக்கவில்லை. 2015 இல் ஒரே ஆண்டில் பாரிய சரிவைக் கண்டு 101 வது இடத்தை அடைந்தது.

2016 ற்கும் 2020 ற்கும் இடைப்பட்ட  ஆண்டுகளில் 95 வது இடத்திற்கும் 99 வது இடத்திற்கும் ஊசலாடிக்கொண்டிருந்தத நிலையில். தொடர்ந்து 2020 இல் 97 வது இடத்தை பிடித்தது.

பொருளாதார வீழ்ச்சி, அந்நியச் செலாவணித் தட்டுப்பாடு மற்றும் அதிகரித்த புலம்பெயர்வு ஆகியவை சர்வதேச அளவில் இலங்கைப் பயணிகள் மீதான எச்சரிக்கையை அதிகரித்தமையால் 2021ல் பின்தள்ளப்பட்டு  107 வது இடத்திற்கு  சரிந்தது. 

2022 முதல் சிறிய முன்னேற்றங்கள் தென்பட ஆரம்பித்ததோடு.

2022 இல் 102, 2023 இல் 100, 2024 மற்றும் 2025 இல் 96 என முன்னேறி, தற்போது 2026 இல் 93 வது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த இரு தசாப்தங்களில் இலங்கை சுமார் 20 இடங்களை இழந்துள்ளது. அண்மைய ஆண்டுகளில் காணப்படும் சிறிய முன்னேற்றங்கள் வரவேற்கத்தக்கவை என்றாலும், 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வலிமையான நிலையை மீண்டும் அடைய இலங்கை இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects