கண்டி தேசிய வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவி வந்த ஒரு பாரிய குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் சுமார் 600 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு அதிநவீன டிஜிட்டல் சிகிச்சை இயந்திரங்கள் 23.04.2026 அன்று வழங்கப்பட்டுள்ளன.
வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோவின் தலைமையில் இது நிறுவப்பட்டது.
சிறுநீரகப் பிரிவுக்கான ESWL இயந்திரம், இது 200 மில்லியன் ரூபா பெறுமதியானது. இந்த இயந்திரம், சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களுக்கும், சிறுநீரகக் கற்களை அகற்றுவதற்கும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
அறுவை சிகிச்சை இன்றி இச்சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் என்பதால், நீண்டகால தாமதப் பட்டியலில் உள்ள நோயாளிகளுக்கு இது பெரும் உதவியாக அமையும் என நிபுணத்துவ வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் மூன்று வருடங்களுக்கும் மேலாக செயலிழந்திருந்த பழைய இயந்திரத்திற்குப் பதிலாக, 400 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான DSA இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
இதன் மூலம் மூளை முதல் நரம்புகள் வரையான பாதிப்புகளை உடனடியாகக் கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும்.
அத்துடன் புற்றுநோய் சிகிச்சைகளுக்கும் இந்த இயந்திரம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் கூறப்பட்டது.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










