கிளீன் ஸ்ரீலங்கா மற்றும் முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் மருந்தக விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மருந்தகங்களை மையப்படுத்தியதான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் மற்றும் சுவரொட்டி என்பவற்றை காட்சிப்படுத்தும் நிகழ்வு 27.04.2026 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வானது கோறளைப்பற்று பிரதேச செயலாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக பிரதேச செயலக போதைப்பொருள் தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










