சமுர்த்தி சமுதாய அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட குழுவிற்கான முதலாவது காலாண்டுக்கான கூட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சமுர்த்தி சமுதாய அமைப்பின் மாவட்ட குழுவிற்கான முதலாவது காலாண்டுக்கான கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபுவின் தலைமையில் மாவட்ட சமுதாய அமைப்பு விடய முகாமையாளர் கே.பகீரதனின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 29.04.2026 அன்று நடைபெற்றது.

சமுர்த்தி சமுதாய அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை ஆராய்வதுடன் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுத்து செல்வதற்கான கலந்துரையாடல் இதன் போது நடைபெற்றது.

மாவட்டத்தில் 2020 சமுதாய அடிப்படை அமைப்புக்கள் தொழிற்பட்டு வருகின்றனர் இவ் அமைப்புக்கள் மூலம் மாவட்டத்தில் இருந்து வறுமையை போக்குவதற்கு தேவையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

2026 – 2027 ஆண்டு ”ஆரோக்கிய வசதியான ஒரு வீடு வலுவான ஒரு குடும்பம்” எனும் செயற்திட்டத்தின் கீழ் ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் தலா ஒரு மில்லியன் பெறுமதியான மூன்று வீடுகள் வீதம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கருத்து தெரிவித்த மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சமுர்த்தி திணைக்களங்களின் நோக்கங்களை அடைவதற்கு வினைத்திறனாக செயற்பட வேண்டும் என்று சமுர்த்தி சமுதாய அமைப்பினர் மற்றும் உத்தியோகத்தர்களிடம் தெரிவித்தார்.

முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக மாவட்டத்தில் போதை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு அமைப்புக்களினால் சேகரிக்கப்படும் கொடி நிதியானது மக்களின் தேவைக்கமைய பயன்படுத்தப்படவுள்ளன.

இந் நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர், சமுர்த்தி வங்கி சங்கங்களின் முகாமையாளர்கள், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் சமுதாய அடிப்படை அமைப்புகளுக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects