இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸுவை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்துக் கலந்துரையாடிள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து வெளிவிவகார அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு, இலங்கைக்கு மேற்கொண்டுள்ள முதலாவது அரச விஜயத்தின் போது, அவரைச் சந்திப்பதில் பெருமிதம் கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி முய்ஸு மற்றும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இருதிஷாம் ஆதம் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினரை வரவேற்ற இலங்கை வெளிவிவகார அமைச்சர், இந்த விஜயம் பயனுள்ளதாகவும் வெற்றிகரமாகவும் அமைய தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, நீண்டகாலமாக நிலவி வரும் மக்கள் இடையிலான தொடர்புகளை மேம்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










