நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புடனும் மாணவர்களுக்கான நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு 17.11.2023 அன்று காத்தான்குடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன், தொற்றா நோய்களுக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி ஈ.உதயகுமார், காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸீர்தீன், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், தலைமை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடசாலை சமூகத்திற்கான குருதிப் பரிசோதனையும் , பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇