”பெண் தலைமைதாங்கும் குடும்பம் மற்றும் மாற்றுத்திறனாளின் வாழ்வாதரத்துக்கு உதவுவோம்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற உணவு திருவிழா நிகழ்வானது மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.அருனாளினி தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வானது சுழல்த்தொகுதியை பாதுகாத்தல் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்குமான சமூக அடிப்படையிலான உள்வாங்கல் அபிவிருத்தி நடைமுறைகள் என்னும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறு தொழில் முயற்சியாளர்களினால் கூடாரங்களில் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததோடு, பாரம்பரிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யப்பட்டதுடன் இக் கண்காட்சியில் கலந்து கொண்டோரினால் பெருமளவான உற்பத்திப் பொருட்ளை கொள்வனவு செய்யப்பட்டதுடன்பொலித்தின் பிளாஸ்டிக்கை தவிப்போம் இலங்கையை நேசிப்போம், ஆரோக்கியமாக வாழ்வோம் என்பதனை கருத்தில் கொண்டு இந்நிகழ்ச்சித்திட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇