கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் இடம்பெறவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக 10 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந் நீர்வெட்டு 09.08.2025 அன்று காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன் பிரகாரம், நிட்டம்புவ கந்தஹேன, கோங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்த , கோலவத்த, கொரகதெனிய ரணபொக்குனகம, படலிய, அத்தனகல்ல, பஸ்யால, உராபொல, திக்கந்த, மிவிட்டிகம்மன, மாஹிம்புல, மாத்தலான, ஹக்கல்ல, அலவல, கல்லபிட்டிய மற்றும் எல்லமுல்ல ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










