06வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இலங்கை விமானப்படை வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சீனாவில் நடைபெற்ற 06வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தம், கபடி மற்றும் நீளம் பாய்தல் ஆகியவற்றில் பதக்கங்களை வென்று இலங்கையை சர்வதேச அளவில் பிரகாசிக்கச் செய்த இலங்கை விமானப்படை வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் தலைமையில்  06.05.2026 அன்று விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

அதன் பிரகாரம், அவர்களின் சிறப்பான சாதனைகளைப் பாராட்டும் விதமாக, அவர்களுக்கு   , சிரேஷ்ட வான்படை வீரர் மற்றும் வீராங்கனை பதவி நிலையில் இருந்து கோப்ரல் பதவி நிலைக்கு பதவி உயர்வு வழங்கியதுடன்  அவர்களின்  சாதனைகளுக்காக  சிறப்புப் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

மேலும் விசேடமான அம்சம் என்னவென்றால், இந்தச் சாதனைகளுக்குப் பெரும் பக்கபலமாக விளங்கிய அவர்களின் பயிற்சியாளர்களும் விமானப்படையால் கௌரவிக்கப்பட்டனர் .

இச் சாதனைகளுக்கு வீரர்களை வழிநடத்திய பயிற்சியாளர்களுக்கு விமானப்படைத் தளபதி சிறப்புப் பணப் பரிசுகளையும் வழங்கினார்.

பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் விவரம் வருமாறு:

மல்யுத்தம் – கோப்ரல் நிபுனி வாசனா தர்மதாச – தங்கப் பதக்கம்

கபடி பெண்கள் – கோப்ரல் ஹன்சிகா பண்டார – வெள்ளிப் பதக்கம்

கபடி பெண்கள் – கோப்ரல் ஷானிகா பண்டார – வெள்ளிப் பதக்கம்

கபடி ஆண்கள் – கோப்ரல் சமிந்த சமரகோன் – வெண்கலப் பதக்கம்

நீளம் தாண்டுதல் பெண்கள் – கோப்ரல் ஷஷிகலா லங்காதிலக்க – வெண்கலப் பதக்கம்

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects