வத்துகாமம் – கபரகலை பிரதான வீதியின் மடுல்கலை நகருக்கு அருகில் உள்ள பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை குறித்த வீதியுடனான போக்குவரத்து மட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளது.
பன்விலை பிரதேச சபைக்குட்பட்ட மடுல்கலை பிரதேசத்தில் உள்ள குறித்த பாலத்தினூடான போக்குவரத்து, கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பன்வில பிரதேச செயலாளர் என்.எஸ்.சேனதீர குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த பாலத்துக்கு அருகில் பொதுமக்கள் பயணிப்பதற்காக மாத்திரம் தனிவழி பாதையொன்று தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.