இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18 இலட்சத்து 28 ஆயிரத்து 985 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அதன் அடிப்படையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 404,752 ஆகும்.

அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 170,422 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 127,613 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 113,293 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 109,653 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 91,694 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 82,328 சுற்றுலாப் பயணிகளும், நெதர்லாந்திலிருந்து 54,437 சுற்றுலாப் பயணிகளும் , அமெரிக்காவிலிருந்து 50,737 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இவ்வாண்டின் ஒக்டோபர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 103,491 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

ஒக்டோபரில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 29,460 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects