அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஏற்கனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் 25.11.2024 அன்று முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அஸ்வெசும நலன்புரித் திட்டப் பயனாளர்களுக்கான குறைகளைச் சமர்ப்பிப்பதற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 25.11.2024 அன்று முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை குறைபாடுகளைத் தெரிவிக்க முடியும் என நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇