நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி இயந்திரம் திருத்தப்பணிகளின் பின்னர் 11.12.2023 அன்று தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த அனல்மின் நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளில் இரண்டு செயலிழந்த நிலையில் இருந்ததால் பழுது நீக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டன.
இந் நிலையில், செயலிழந்த நிலையில் இருந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி இயந்திரம் பழுது நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇