நாட்டில் மூளைக்காய்ச்சலால் இதுவரை 200 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரே இன்று (27.05.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசியபோதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது 4 மாவட்டங்களில் 50 பேர் மாத்திரமே இந்நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், தற்போது மூளைக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறபோதும் தொடர்மழை, சீரற்ற வானிலை காலத்தில் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் மேலும் தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










