இலங்கை சாரணர் சங்கத்தின் தேர்தல் மற்றும் ஆண்டுப் பொதுக் கூட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026/2027 ஆம் ஆண்டிற்கான இலங்கை சாரணர் சங்கத்தின் தேர்தல் மற்றும் ஆண்டுப் பொதுக் கூட்டம் சங்கத்தின் தேசிய தலைமையகத்தில் 23.05.2026 அன்று நடைபெற்றது.

இதில், முன்னாள் சங்கத்தின் தலைவரான ரன்சிறி பெரேரா பெரும்பான்மை வாக்குகளால் சாரணர் சங்கத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அத்துடன். கமலநாத் ஜினதாச பெரும்பான்மை வாக்குகளால் செயற்குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் செயலாளர் சுஜீவ ஜயவர்தன போட்டியின்றி செயலாளராகவும், முன்னாள் பொருளாளர் தினேஷ் நிரோஷன மானவடு சபையின் ஏகமனதான ஒப்புதலுடன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து, புதிய தலைவர், பிரதம ஆணையாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் நாணயக்காரவுடன் புதிய நிர்வாக சபையினர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

புதிய செயற்குழுவின் தலைவராக ரன்சிறி பெரேரா, துணைத் தலைவர்களாக, எம். ஜே. சாதிக் அமின், பி. எஸ். கௌதமதாச,திருமதி. மல்லிகா குணரத்ன,லலித் சிறிமேவன் குலதுங்க ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects