கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் மாகும்புரவிற்கும் இடையிலான சொகுசு பேருந்து சேவை இன்று (01.06.2026) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தைப் பயன்படுத்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு வசதியான, பாதுகாப்பான போக்குவரத்தை வழங்கும் நோக்கில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் மற்றும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை ஆகியன இணைந்து இந்த சேவையைச் செயல்படுத்துகின்றன.
குறித்த சேவையின் ஊடாக விமான நிலையத்திற்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் பயணிகள், மாகும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையத்திற்கும் விமான நிலையத்திற்கும் இடையே வசதியான மற்றும் விரைவான போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கான பயணக் கட்டணம் 410 ரூபா எனவும், பயண நேரம் சுமார் 50 நிமிடங்கள் எனவும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த சொகுசு பேருந்து சேவை காலை 5.15 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் ஒருமுறை இயக்கப்படவுள்ளது.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










