ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026 – இம் மாதம் 11 ஆம் திகதி முதல் ஆரம்பம்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கால்பந்து விளையாட்டின் மாபெரும் திருவிழாவான ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை தொடர், இம் மாதம் 11 ஆம் திகதி முதல் ஜூலை 1 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

4 வருடங்களுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டிக்கு நிகராக நடத்தப்படும் இத்தொடர், உலக விளையாட்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் முக்கிய போட்டியாகும்.

வழக்கத்திற்கு மாறாக இந்த முறை 32 அணிகளுக்குப் பதிலாக, மொத்தம் 48 அணிகள் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாகப் பங்கேற்கின்றன.

இந்த தொடரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

3 நாடுகளில் உள்ள மொத்தம் 16 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி பின்வரும் நேரங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்:

நள்ளிரவு 12.30 மணி

அதிகாலை 3.30 மணி

காலை 6.30 மணி

காலை 9.30 மணி

குழு சுற்றுகளின் (Group Stage) முடிவில், ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகளுடன், குழுக்களுக்கு இடையில் சிறந்த முறையில் விளங்கும் மேலும் 8 அணிகளும் அடுத்த சுற்றுக்கு (Round of 32) தகுதி பெறும். அதனைத் தொடர்ந்து கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிச் சுற்றுப் போட்டிகள் இடம்பெறும்.

மொத்தம் 104 ஆட்டங்கள், 16 நகரங்களில் அமைந்துள்ள மைதானங்களில் விளையாடப்படவுள்ளன.

உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி, நியூ ஜெர்சியின் ஈஸ்ட் ருதர்ஃபோர்டில் அமைந்துள்ள 82,500 பார்வையாளர்கள் அமரக்கூடிய புகழ்பெற்ற ‘மெட்லைஃப் ஸ்டேடியத்தில்’ (MetLife Stadium) நடைபெறவுள்ளது.

அமெரிக்கா (11 மைதானங்கள்): மெட்லைஃப் (82,500), ஏடி அண்ட் டி (80,000), ஏரோஹெட் (76,416), என்ஆர்ஜி (72,220), மெர்சிடிஸ் பென்ஸ் (71,000), சோஃபி (70,240), லிங்கன் ஃபைனான்சியல் ஃபீல்ட் (69,796), லெவிஸ் (68,500), லூமன் ஃபீல்ட் (68,740), ஜில்லெட் (65,878), ஹார்ட் ராக் (64,767).

கனடா (2 மைதானங்கள்): பிசி பிளேஸ் (54,500), பிஎம்ஓ ஃபீல்ட் (45,736).

மெக்ஸிகோ (3 மைதானங்கள்): எஸ்டாடியோ அஸ்டேகா (87,523), எஸ்டாடியோ பிபிவிஏ (53,500), எஸ்டாடியோ அக்ரான் (49,850).

குழு வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ள அணிகளின் விபரம்

குழு ‘A’: மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, செக் குடியரசு

குழு ‘B‘: கனடா, போஸ்னியா & ஹெர்சகோவினா, கட்டார், சுவிட்சர்லாந்து

குழு ‘C’: பிரேசில், மொராக்கோ, ஹைதி, ஸ்கொட்லாந்து

குழு ‘D’: அமெரிக்கா, பராகுவே, அவுஸ்திரேலியா, துருக்கி

குழு ‘E‘: ஜெர்மனி, குராசாவோ, ஐவரி கோஸ்ட், ஈக்வாடோர்

குழு ‘F’: நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன், துனிசியா

குழு ‘G’: பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூஸிலாந்து

குழு ‘H’: ஸ்பெயின், கேப் வெர்டே, சவுதி அரேபியா, உருகுவே

குழு ‘I’: பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே

குழு ‘J’: அர்ஜெண்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான்

குழு ‘K’: போர்ச்சுகல், காங்கோ, உஸ்பெகிஸ்தான், கொலம்பியா

குழு ‘L’: இங்கிலாந்து, குரோஷியா, கானா, பனாமா

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects