பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம், இலங்கைப் பாராளுமன்றத்தின் குழு அறை 02 இல் அண்மையில் நடைபெற்றது.
இதில் 2026 ஆம் ஆண்டிற்கான பதவி தாங்குனர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
இதற்கமைய பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக. பி.எம். ரஸீல் உப தலைவராக எம்.ஐ.எம். பாஸி , செயலாளராக சி. மணிமாறன், பொருளாளராக, எம்.ரீ. செய்னுர் ரிஃபா உதவிச் செயலாளராக டி. துலாங்கனி , செயற்குழு உறுப்பினர்களாக எம். மயூரேஷன், ஏ.ஏ.எஸ். சபாயா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பதவி தாங்குனர்கள், பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் சட்டத்தரணி சீ.ஜே. கருணாரத்ன மற்றும் பிரதிப் பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்களான ஏ.ஜி.எம். பிக்ரி, அ. சரவணபவானந்தன், என்.பி.சி.ஜே. நிஸ்ஸங்க ஆகியோருடன் குழுப் புகைப்படமொன்றையும் எடுத்துக்கொண்டனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










