தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் முதல் நாளில் ஆய்வு செய்யப்பட்ட 31,196 இடங்களில் 2,097 இடங்களில் டெங்கு நுளம்பு கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் 14 மாவட்டங்களின் 72 சுகாதார மருத்துவ அலுவலர் பிரிவுகளில் 08.06.2026 அன்று தொடங்கிய இந்த விசேட நடவடிக்கையின்போது, 8,121 இடங்கள் டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனுடன் 1,165 எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டதுடன், 789 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள், கட்டுமானத் தளங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் அதிக ஆபத்துள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










