மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மீண்டும் அமெரிக்கா ஈரானுக்கு இடையில் ஏற்பட்ட போரினால் உலக எரிசக்தி போக்குவரத்தின் முக்கிய மையங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (11.06.2026) ஒரு பீப்பாய்க்கு 2 டொலருக்கும் அதிகமான தொகையால் வேகமாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சர்வதேச குறியீடான பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 2.47% ஆல் (2.30 டொலரால்) அதிகரித்து, ஒரு பீப்பாய் 95.40 டொலராகப் பதிவாகியுள்ளதுடன், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 2.89% ஆல் (2.60 டொலரால்) அதிகரித்து, ஒரு பீப்பாய் 92.63 டொலலர் வரை உயர்ந்துள்ளது.

எண்ணெய் விநியோகக் கப்பல்கள் மற்றும் இதர வணிகக் கப்பல்கள் உட்பட அனைத்து வகையான கப்பல்களுக்காகவும் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடப்படுவதாக ஈரானின் கூட்டு இராணுவ தலைமையகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects