மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்காலிக அடிப்படையில் உதவியாளர்களை கீழ் வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக
மட்டக்களப்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் கட்டாக்காலி மாடுகளைக் கைப்பற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் பின்வருமாறு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக மாநகரசபை அறிவித்துள்ளது.
- கால்நடை வைத்திய அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு காது அடையாள இலக்கம் இடப்பட்ட ஒரு மாட்டினை கைப்பற்ற ரூபா 1000 வும், கால்நடை வைத்திய அலுவலகத்தில் பதிவு செய்யப்படாமலும், காது அடையாள இலக்கம் இடப்படாமலுமுள்ள ஒரு மாட்டினைக் கைப்பற்ற ரூபா 1500 வும் ஊக்குவிப்பு கொடுப்பனவாக வழங்கப்படும்)
- உடல் ஆரோக்கியம் உடையவராக இருத்தல் வேண்டும்.
- ஆண்கள் விண்ணப்பிப்பது விரும்பத்தக்கது.
- சேர்த்துக் கொள்ளப்படும் பட்சத்தில் நிரந்தர நியமனம் கோருவதற்கோ அல்லது நாட் சம்பளம் கோருவதற்கோ இடமளிக்கப்படமாட்டாது.
ஆர்வம் உடையவர்கள் மட்டக்களப்பு மாநகர சபை பிரதான அலுவலகத்திற்கு நேரடியாக வருகைதந்து 09.07.2026 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுசெய்து கொள்ளுமாறு மாநகர ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










