நாடு முழுவதுமுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களினதும் சேவைகள் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கள், புகார்கள், பாராட்டுக்கள் அல்லது ஆலோசனைகளை நேரடியாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய இணையவழி டிஜிட்டல் தளமொன்றின் (Online Digital Platform) ஊடாக, ”Sri Lanka Police Community Feedback Portal” என்ற பெயரிலான QR குறியீட்டுப் பலகை முறையொன்றைப் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சேவையின் மூலம் குடிமக்கள் தங்களது கருத்துக்களையும் பின்னூட்டல்களையும் எளிதாக வழங்க வாய்ப்பு ஏற்படுவதுடன், அந்தத் தரவுப் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்தி, மக்களை மையமாகக் கொண்ட மிகவும் திறமையான பொலிஸ் சேவையொன்றை வழங்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இந்த QR குறியீட்டைப் பயன்படுத்தும் முறை பின்வருமாறு:
கருத்து, புகார், பாராட்டு, ஆலோசனை ஆகிய பிரிவுகளில் இருந்து பொருத்தமான தெரிவைத் தேர்ந்தெடுத்தல்.
தேவையானால், தனிப்பட்ட விபரங்களை உள்ளிடலாம். (Need to add my personal details)
பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்ததற்கான காரணம் (Add my visit information)
ஏனைய விபரங்கள் (Add more information)
சம்பவம் அல்லது கருத்து தொடர்பான விபரங்களை உள்ளிடுதல்.
மேலும், இலங்கை பொலிஸாரின் police.lk இணையதளத்திற்குச் சென்று, அதில் உள்ள E – Services பகுதிக்கு ஊடாக Community Feedback Portal ஐ அணுகியும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களையும் பின்னூட்டல்களையும் எளிதாக வழங்க முடியும்.
அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் எளிதாகப் பார்க்கக்கூடிய வகையில் (வரவேற்புப் பிரிவு, குற்றச்சாட்டுப் பிரிவு போன்ற இடங்களுக்கு அருகில்) “Sri Lanka Police Community Feedback Portal” (https://feedback.police.lk) என்ற பெயரிலான QR குறியீட்டுப் பலகைகள் காட்சிப்படுத்தப்படும்.
சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு இந்த வசதி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தேவையான சந்தர்ப்பங்களில் அவர்கள் இந்த Community Feedback Portal ஐப் பயன்படுத்துவதற்கு உதவுவதற்கும், இந்தச் சேவையை வழங்குவதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பொலிஸ் மா அதிபர் (IGP) அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு (OIC) அறிவுறுத்தியுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










