இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் விமானப் படைகளின் கட்டளை தளபதி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அமெரிக்க பசுபிக் விமானப் படைகளின் கட்டளை தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் 3 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு 21.06.2026 அன்றுஇலங்கை வந்துள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு பங்காண்மையின் வளர்ந்து வரும் பலத்தினை பிரதிபலிக்கும் வகையில் இந்த விஜயம் அமைந்துள்ளது.

எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், பாதுகாப்பு அமைச்சு மற்றும் விமானப்படைகளைச் சேர்ந்த தலைமை அதிகாரிகள் உட்பட சிரேஷ்ட அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

வான் மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு இணைய பாதுகாப்பு, அனர்த்தங்களின் போது செயற்பட வேண்டிய விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையினை கீழே பார்வையிட முடியும்,

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects