வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களை மையமாகக் கொண்டு சமுதாய மட்ட சுற்றுலா அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உடன்பாட்டு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.
கொரிய அரசாங்கத்தின் 2,172 பில்லியன் வொன் நிதியனுசரணையுடன், கொரியா சுற்றுலா நிறுவனம் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு இடையிலான உடன்பாட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கடந்த ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, கொரிய சுற்றுலா நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று தெரிவு செய்யப்பட்ட மாகாணங்களுக்கு அண்மையில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது.
இதன் பின்னர்அனைத்து கருத்திட்டத்தையும் ஒரேதடவையில் ஆரம்பிப்பதற்காக உடன்பாடு எட்டப்பட்டது.
இதற்கமைய, கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இருதரப்பினருக்கும் இடையில் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள விடயங்களுக்கு , அமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇