இலங்கை மத்திய வங்கி தனது ‘ஓரிரவு கொள்கை வட்டி’ வீதத்தை’ மாற்றமின்றி 7.75% ஆகத் தொடர்ந்து பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.
27.01.2026 அன்று நடைபெற்ற நாணயக் கொள்கை சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான முதலாவது மீளாய்வுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு பொருளாதார மாற்றங்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நடுத்தர காலத்தில் பணவீக்கத்தை 5% என்ற இலக்கு மட்டத்தில் ஸ்திரமாகப் பேணுவதை நோக்கமாகக் கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










